
முல்லைத்தீவு சிலாவத்தை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பழனியப்பு சந்திரமோகன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் உறவு கொண்டு
குடும்ப உறவுகள் வீழ்ந்துவிடாதிருக்க
ஆணிவேரென இருந்தாய் நீயே...!
காலனவன் இன்னுயிர் பறிக்க
சோகத்தை தந்துவிட்டு சொல்லாமல் சென்றதேனோ..!
காலனவன் கணக்கில் தப்பென்று சொல்லுவதா
இல்லை கண்களை குளமாக்க விதி செய்த விளையாட்டா..!
சோகத்தில் உன் அம்மா, மனைவி, பிள்ளைகள், உடன்பிறப்புக்கள் கதறியழ சொல்லாமல்
செல்ல என்ன தான் அவசரமோ..!
நலமுடனே வாழ்ந்து வந்தாய்
எல்லோர் மேலும் கருணை காட்டி வந்தாய்...!
எதிர் பாராமல் சட்டென்று இழந்து விட்டோம்
இனி எப்போ காண்போம் அப்பா உங்களை.....!
உமது ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.......
அன்னாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியவர்கள், பல உதவிகளை செய்து எமக்கு உறுதுணையாய் நின்றோர், தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியவர்களுக்கும் மற்றும் உணவுகளை தந்து உதவிய உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அதனைத்தொடர்ந்து அவரது இல்லத்தில் நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.