Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 09 NOV 1939
இறப்பு 23 JUL 2026
திருமதி பக்தசீதா கனகலிங்கம்
வயது 86
திருமதி பக்தசீதா கனகலிங்கம் 1939 - 2026 கரந்தன், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கரந்தன் உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கரந்தன், சாவகச்சேரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட பக்தசீதா கனகலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பாய் பண்பாய் பாசமாய்
எங்களை அரவணைத்த அன்புத் தெய்வமே
உங்கள் பிரிவின் இடைவெளி
 மாதம்  ஒன்று ஆகியதோ!
நம்ப முடியவில்லையம்மா உங்கள் இழப்பை

உங்கள் உருவத்தை நாம் இழந்தோமன்றி
நின் உயிர் எம்மோடுதான் இருக்குதம்மா..!

வாழும் போதும் எம் வழிகாட்டி நீ
வானுலகில் இருந்தும் வழிகாட்டு நீ
எமக்குமீண்டும் நீ வரவேண்டும் எம் குடும்பத்தில்
என்றும் காத்திருப்போம் உன் வரவுக்காய்!

ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!!

எமதுயிர் உள்ளவரை
உங்களுக்காக உங்கள்
ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கின்றோம்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!   

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், கனகலிங்கம் குடும்பத்தினர்
Tribute 20 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.