

திருகோணமலை. தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகவும், பெரிய கல்லாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் இரத்தினசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
வறுமையின் வருடல் உணராமல் - எமை
வாஞ்சையோடு வளர்த்த தெய்வம் நீங்களம்மா!
பொறுமையின் பொக்கிஷம் நீங்களல்லோ!
பொருள், புகழ், பதவி அந்தஸ்த்தோடு நாம் வாழ கல்வியெனும்
நறுமணம் தந்த நல்ல தாய் நீங்களம்மா!
மறுமையிலும் மக்கள் எம்மையே, நேசிப்பாய்! யோசிப்பாய்!
மனம் நொந்து உள்மனம் அறிந்து, மன்றாடுகின்றோம்
மகராசி உங்கள் ஆத்மா சாந்தி பெற்றிடவே!!!
உங்கள் பிரிவால் வாடும்
அன்பு மகன், ஆசை மகள்மார், அருமை மருமக்கள், பேரப்பிள்ளைகள்
மற்றும் உற்றார் உறவினர்கள்.