பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி 21 ஆகஸ்ட் 2026, தனது 94-வது வயதில் காலமானார்.
சௌகார் ஜானகி 1931 டிசம்பர் 12 அன்று ராஜமுந்திரியில் பிறந்தார்.
அவரது தந்தை டெக்குமல்லா வெங்கோஜி ராவ், தாய் சச்சி தேவி. அவருடைய தங்கை கிருஷ்ணகுமாரி பின்னாளில் பிரபல தெலுங்கு நடிகையாக விளங்கினார்.
ஜானகி தன் தொடக்கக் கல்வியை அசாமில் உள்ள குவகாத்தி பல்கலைக்கழகத்தில் முடித்து, அரிசோனா பல்கலைக்கழகத்தில் இருந்து மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றார்.
அவருக்கு சுமார் 15 வயதிலேயே திருமணம் நடைபெற்றது. அவரது கணவர் சீனிவாச ராவ், வானொலி பொறியாளராகப் பணியாற்றியவர். திருமணத்திற்குப் பிறகு விஜயவாடாவில் கணவருடன் வாழ்ந்தார்.
இவருக்கு மகள் இரண்டு பேரும், மகன் ஒருவரும் உள்ளனர். இவரின் பேத்தியான வைசுணவி அரவிந்தும் நடிகையரில் ஒருவர். வைசுணவி 1987 முதல் பல தமிழ், தெலுங்குத் திரைப்படங்களிலும், சில மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு முன்பே அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்திருந்தது. ஆனால் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தின் நிலைமை மிகவும் கஷ்டமாக இருந்ததால், கைக்குழந்தையுடன் சினிமா வாய்ப்பு கேட்டு தயாரிப்பாளர் பி.நாகிரெட்டி/பி.என்.ரெட்டி தொடர்புடைய வாய்ப்பை நாடினார்.
அதன் தொடர்ச்சியாக N. T. ராமாராவ் கதாநாயகனாக நடித்த சௌகார் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்தின் பெயரே பின்னர் அவருடைய நிரந்தர திரைப்பெயராக மாறியது.
இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்களில் சில:
பணம் படுத்தும் பாடு (1954), புதிய பறவை (1964), நீர்க்குமிழி (1965), மகாகவி காளிதாஸ் (1966), எதிர்நீச்சல் (1968),
இரு கோடுகள் (1969), உயர்ந்த மனிதன் (1968), காவியத் தலைவி (1970), ரங்க ராட்டினம் (1971), தில்லு முல்லு (1981), வெற்றி விழா (1989), தேவி (1999), ஹே ராம் (2000).
ஜானகி 3,000-இற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். கலைத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்புகள் அளப்பரியவை.
சௌகார் ஜானகி பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவற்றில் சில குறிப்பிடத்தக்க விருதுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
விருதுகள்:
1985இல் மகாநதி சாவித்திரி விருது
தமது துறையில் சிறந்து விளங்கியதற்காக அரிகோனாவின் உலகப் பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம் (1985)
1989இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் டியோனாரா கோல்டன் விருது
2004இல் நடிகர் திலகம் சிவாஜி வாழ்நாள் சாதனையாளர் விருது
2000இல் டாக்டர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் வாழ்நாள் சாதனையாளர் விருது
சிறீ கிருஷ்ணதேவராயா விருது, கர்நாடகம்
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது (1969-1970)
தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகள்-எம். ஜி. ஆர். விருது (1990)
இரு கோடுகள் திரைப்படத்திற்காக தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது - சிறந்த நடிகை (1970)
சம்சாரம் ஒகா சதரங்கம் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான நந்தி விருது (1987)
இந்தியத் திரையுலகின் என்றும் இளமைத் திரைக் கலைஞர் என்ற வகையில் வொண்டர் விமன் விருதுகள் (2019)
தமிழ்நாடு அரசின் புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது (2020)
இந்திய அரசின் பத்மசிறீ விருது (2022).
புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை திருமதி பத்மஸ்ரீ சௌகார் ஜானகி அவர்களின் மறைவிற்கு RIPBOOK மற்றும் சினி உலகம் இணையதளங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நலம் விரும்பிகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் துயரிலும் பங்கெடுத்துக்கொள்கின்றன.