

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியநாதர் றெஜிஸ் செல்வநாதன் அவர்கள் 28-11-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ம. பாக்கியநாதர்(மண்டைதீவு றோ. க. த. க. பாடசாலை முன்னாள் அதிபர்- பாக்கிய மாஸ்டர்), காலஞ்சென்ற திரேஸ் அந்தோணியாப்பிள்ளை(தவமணி- கனடா) தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை சூசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரிய றீற்றா(லீலா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற செல்வன் மெறில் கிளின்ரன், றவ்பாயேல் தொம்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றொசாலியா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற டியூக் ஜெகநாதன், அமிர்தநாதன்(கனடா), றெஜினாமணி றோஸ்(கனடா), றஞ்சி(கனடா), அமலநாதன்(கனடா), காலஞ்சென்ற கிளாரன்ஸ் யோகநாதன்(இத்தாலி) மற்றும் அருமைநாதன்(கனடா), றோகினி(கனடா) ஆகியோரின் ஆருயிர் சகோதரரும்,
மரியதிரேசா(கனடா), றஜி(கனடா), பொனிப்பாஸ்(கனடா), பியதாஸ்(கனடா), மெல்சி(கனடா), சுமதி(இத்தாலி), சுகந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-12-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் இல. 89/1, அன்டேசன் வீதி, குடாப்பாடு, நீர்கொழும்பிலுள்ள இல்லத்திலிருந்து கடற்கரை வீதி, புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு இறுதி அஞ்சலி திருப்பலிக்காக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் நீர்கொழும்பு கடற்கரைத்தெருவில் உள்ள கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.