Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 FEB 1933
இறப்பு 29 NOV 2018
அமரர் பக்கிரிபத்தர் கந்தையா
வயது 85
அமரர் பக்கிரிபத்தர் கந்தையா 1933 - 2018 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நாச்சிமார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பக்கிரிபத்தர் கந்தையா அவர்கள் 29-11-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பக்கிரிபத்தர் வள்ளியம்மை தம்பதிகளின் மூத்த மகனும்,

காலஞ்சென்ற வீரலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

செல்லத்துரை, தம்பிராசா, நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகுமார்(ராசன்- யாழ்ப்பாணம்), நிர்மலாதேவி(தேவி- புதுக்குடியிருப்பு), ரஞ்சிதமலர்(ரஞ்சி- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சத்தியராணி(சத்தி), சிறிகந்தராசா(ஶ்ரீதேவி நகைமாடம்- புதுக்குடியிருப்பு), நவநீதகிருஸ்ணன்(வேனுஷா நகைமாடம்- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

துஷாந்தன், ராகுலன், ஷாமினி(ஆசிரியை- இரணைபாலை மகாவித்தியாலயம்), காலஞ்சென்ற பிரவீனா, அனோயன்(ஜெர்மனி), சரணியா- கண்ணன், தனுஷ்யன்(கல்வியல் கல்லூரி- யாழ்ப்பாணம்), வினோஜிதன்(சுவிஸ்), கயந்தன்(சுவிஸ்), வேனுஷா(சுவிஸ்), சுபேதா(சுவிஸ்), அபிமலர்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிரவின், சரவின் ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான அப்புலிங்கம், அன்னலட்சுமி, விநாசித்தம்பி, கமலேஸ்வரி, பரமானந்தம், வேதவள்ளி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-11-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பையன்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: அனோயன்(பேரன்)