யாழ். இல. 96, மணிக்கூட்டு வீதியைப் பிறப்பிடமாகவும், இல. 859/06, கே.கே.எஸ் வீதியை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியராசா நாகபூஷணி அவர்கள் 07-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, ரேவதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற நவரத்தினம், தனபாக்கியம்(காரைநகர் - மல்லிகை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாக்கியராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
கோபிராஜ், பத்மஜா, கோபிரஞ்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அச்சுதா, சம்பந்தன், கிருஷாந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பதுமன், மகரிஷி, ஆதீரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், பாலிதராஜா மற்றும் சந்தானலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிறீகரலட்சுமி, தர்மராசா, காலஞ்சென்ற சாரதா, லலிதா(அன்னம்), கோகனதை, நீர்மலாதேவி, அரிகரராசா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-12-2021 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த இரங்கல்கள் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.