மௌனமே மொழியாய் ....... அம்மை அப்பனுக்கோர் பாக்கியம், அருமைப்பிள்ளை கிடைத்ததே பாக்கியம், மலர்ந்த முகமே பாக்கியம், சிந்தும் குறுநகை நிதந்தரம், ஓர் பாக்கியம். கனிந்த பார்வை பாக்கியம், கவர்ந்தே செல்வதேன் பாக்கியம், இளவல் அமிர்தனுக்கு என பாக்கியம், இல்லறம் செய்வதற்கோர் பாக்கியம். விதானை அமிர்தருக்கோர் பாக்கியம், விதந்துரைக்க மக்களுக்குப் பாக்கியம், அச்சுவேலி, இடைட்காட்டிற்கோர் பாக்கியம், துன்னாலை தந்ததோர் பாக்ககியம். குழந்தை குட்டிகளுக்கோர் பாக்கியம், நிறைவான வாழ்க்கை அமைத்த பாக்கியம், உற்றார் உறவினர்கோர் பாக்கியம், பேரக் குழந்தைகளுக்கு அதிலும் பாக்கியம். அமிர்தர் அழைத்தாரோ பாக்கியம்?, அவசரம் என்னதான் பாக்கியம்?, சொல்லாமல் சென்றாயோ பாக்கியம்?, தாமதமாய் சென்றிருந்தாலென்ன பாக்கியம்?. நினைவில் நிறைந்தாய் பாக்கியம், மறந்தால் தானே நினைப்பதற்கு பாக்கியம், செய்து காட்டினாய் பாக்கியம், காணும் திக்கெல்லாம் பாக்கியம். நிறைவாய் வாழ்ந்து விட்டாய் பாக்கியம், நீங்கா நினைவில் நீங்கள் தான் பாக்கியம், மௌனமாய் போனதால் பாக்கியம், மௌனமே மொழியாய் பாக்கியம் ..... ..... அமலன் குடும்பம்
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.