15ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
பிரான்ஸ் பரிஸை பிறப்பிடமாகவும், Lieusaint (77127)-ல் வசித்தவருமாகிய நோயல் றெஜிஸ் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் பிறப்பே! ஆசை மகனே!
ஆறுதில்லையடா மனம் வேதனையால்
இனிய வார்த்தை பேசிய இளையவனே!
ஈடில்லை உனக்கொருவரும்,
தேவனின் பாதமடைந்தாய்
உறவுகள் ஏங்குதடா உன்னைக் காணாமல்
ஊட்டி வளர்த்தவர்கள் உள்ளம் சோர்வடைந்து
எங்கெல்லாம் தேடுகிறோம்
ஏன்தான் எமைப் பிரிந்தாய் ...
ஆண்டுகள் பல ஓடி மறைந்தாலும்
உம் நினைவு என்றென்றும்
எம் மனதில் நிறைந்திருக்கும்...
காலங்கள் விடை பெறலாம்
ஆனாலும் கண்முன்னே நிழலாடும்
உம் நினைவுகள் பல ஆண்டுகள்
சென்றாலும் எம் உயிர் உள்ளவரை
உம் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்போம்...
தகவல்:
குடும்பத்தினர்