10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
ஜேர்மனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நிவேதன் அருந்தவராஜா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமக்கொரு ஆண்பிள்ளை நீ என்று
அன்பாக வளர்ந்து நிவேதன் எனும்
செல்லப் பெயரை உனக்கு வைத்து
அன்பாக அழைத்தோமே!
இன்று உன் நாமத்தை தொலைத்து விட்டு
தேடுகின்றோம் நீ போன வழியெங்கும் விழிவைத்து
காணவில்லை நிழலைக் கூட- ஏங்கி
தவித்து இன்று ஆண்டு பத்தாகியது
விடி காலை மலர் தூவி தீபம் ஏற்றி
கண்ணீரால் நீர் தெளித்து- வணங்கின்றோம்
தினம் உனக்கு
நீ அறிவாயோ எம் உள்ளக்குமுறவை
இன்று போல் உள்ளது உன் நிகழ்வு
ஆனால் காலம் கடந்ததோ பெருமளவு
காலமுள்ள வரை உன் நினைவோடு
வாழ்ந்தே கழித்திடுவோம் மிகுதி நாளை
என்றும் உன் நினைவோடு வாழும்
அப்பா அம்மா அக்கா அத்தான் மருமகன் மருமகள்...
அருந்தவராஜா(அப்பா- புன்னாலைக்கட்டுவன்), ரோகினி(அம்மா- அளவெட்டி)
தகவல்:
அருந்தவராஜா(தந்தை)