Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 JAN 1969
இறப்பு 13 NOV 2018
அமரர் நித்திலன் விக்னராஜா (நித்தி)
வயது 49
அமரர் நித்திலன் விக்னராஜா 1969 - 2018 கணுக்கேணி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா, ஜெர்மனி ஆகிய இடங்களை  வதிவிடமாகவும் கொண்டிருந்த நித்திலன் விக்னராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்புமுகம் எமைவிட்டு
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புச் செல்வமே

ஓராண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
நாமும் கண்டோம்

கனவெல்லாம் நனவாகும்
காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லையே!

உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும்
உறைந்திருக்கும் ஐயா!!  

உமது ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கும் தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள்.

தகவல்: குடும்பத்தினர்