யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நிரோஷினி சிவராஜா அவர்கள் 22-07-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை பொன்னையா தம்பதிகள், கபிரியல் யோசப் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற சிவராஜா, இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
டினேஷ்(அவுஸ்திரேலியா), நிதர்ஷினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வகுமார்(அவுஸ்திரேலியா), வினோதினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்தோஷ், விகாஷ் ஆகியோரின் அன்பு மாமியும்,
சனோஷ், லக்ஷரா ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 23-07-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் மரியன்னை தேவலயத்தில்(St. Mary’s Cathedral Church) திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.