கனடா Toronto ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நிரோஷன் துரைசிங்கம் அவர்கள் 31-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணன் மீனாட்சி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த துரைசிங்கம்(துரை) மகாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
சண்சுதன், நிஷாந்தன் ஆகியோரின் அன்புச் சசோதரரும்,
ஜனீனா, தர்ஷினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரேயா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்றவர்களான குணசிங்கம், தர்மகுலசிங்கம், கணேசலிங்கம் மற்றும் கலாவதி, காலஞ்சென்ற கோபால், மைனாவதி(இலங்கை), மல்லிகாவதி, பொன்னுத்துரை(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற கதிரமலை, கர்ணாதேவி, கணேசலிங்கம்(அவுஸ்திரேலியா), ராஜரட்ணம், ராணி, சந்திரசேகரம், ஜீவா(அவுஸ்திரேலியா), ரட்ணராஜா, காலஞ்சென்ற சதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய வேண்டி பிராத்திக்கிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.