அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து வசிப்பிடமாகவும், கிளிநொச்சியை தற்போதய வதிவிடமாகவும் கொண்டிருந்த நிர்மலன் கணேசபிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
விழிநீரை துடைக்க விரல் ஒன்று இருந்தது அன்று பத்து ஆண்டுகள் கழிந்தது இன்று இதயம் கருகி இமைகள் நனைகிறது உங்கள் பிரிவினிலே...
எத்தனை உறவுகள் இருந்தாலும் தோள்சாய நீங்கள் இல்லையே! என கதறியழும் பிஞ்சுகளை அரவணைக்காது அநாதரவாய் தவிக்க விட்டுவழி தெரியாத் தூரம் விரைந்தோடி சென்றதேனோ!
வானில் சிந்திடும் துளியில் மண்ணில் பயிர்கள் துளிர்விடும் எங்கள் விழிகள் சிந்திடும் துளியின் வழியில் உங்களை கண்டிட முடியாதோ....
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும் கடந்து வந்த பாதையிலே நினைவலைகள் தொடரட்டும்
நீங்கள் எமக்கு வழிகாட்டியாய் என்றும் எங்கள் இதயத்திலேயே வாழ்கிறீர்கள்..........