ஹற்றனைப் பிறப்பிடமாகவும், ஹற்றன், கண்டி, கனடா Toronto, Oshawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நிரஞ்சன் அசோக் பிரான்சிஸ் மரியதாஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேற்றுப் போல் எல்லாம்
எம் நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றாய்
சென்றுவிட்டாய் என்று என்னால்
சிறிதும் எண்ணத்தோன்றவில்லையடா
உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும்
உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்!
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வாழ்ந்து கொண்டே இருக்கும்
இன்பத்திலும்,துன்பத்திலும்,
உறக்கத்திலும் கூட இணைபிரியாமல்
சுற்றித்திரிந்த உன்னதமான உறவான
உன் உயிர் நண்பனுடன் சென்றாயே!
எனக்கான என்ன செய்வாய் என்று
கேட்டவனிடம் நான் என் உயிரையே தருவேனடா
என்று நீ கஜனின் தோள் சாய்ந்தாய்
அந்த தருணம் ஆண்டவன் போட்ட கணக்கு
யாருக்கும் புரியவில்லை
அந்த வார்த்தை
பொய்க்காமல் அவனுடனே உயிர் துறந்தாய்
இதுவல்லவோ உயிர் நட்பு!
சாந்தி சாந்தி சாந்தி..