யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இராக், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் யாழ்ப்பாணம் குரூசோ வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நீக்கிலாப்பிள்ளை வென்சஸ்லஸ் தங்கராஜா அவர்களின் நெஞ்சைவிட்டு அகலாத 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்குரிய அப்பாவே
அன்பும் பண்பும் அறிவும் நிறைந்த
புன்னகையின் புகலிடமே உம்மருகில்
நாம் வாழும் பாக்கியத்தை
இழந்துவிட்டோம் அப்பா!
பாசத்தின் திருவுருவாய்
பண்பின் உறைவிடமாய்
எங்களுக்கெல்லாம் அன்புக் காட்டி
அரவணைத்த எங்கள் அன்பு தெய்வமே அப்பாவே
உங்களை காண உங்கள் குரல் கேட்க
மனம் ஏங்கித் தவிக்கின்றது
உங்கள் புன்னகை பூத்த
நல்லமுகம் மறைந்தது என்று
நம்ப முடியவில்லை அப்பா
எம் சோகத்தைத் தாங்கமுடியவில்லை அப்பா!
கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகி போனாலும்
எங்கள் முன்னே என்றும் உங்கள் முகம் உயிர்வாழ்கிறது
“அப்பா அப்பா” என்று என் நா அழைக்கிறது
ஆனாலும் உங்களை காணமுடியவில்லை அப்பா
என்னை கண்னைப்போல காத்து,
பண்போடு வளர்த்து, நற்கல்வியிலும், நல்வாழ்வும்
தேடிதந்த எங்கள் ஒளிவிளக்கே அப்பா!
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தாலும்,
எங்களின் ஒவ்வோரு அசைவிலும்
வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள் அப்பா
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்கள் திருமுகம்
எங்களை விட்டு என்றும் நீங்காது...
மீண்டும் ஒரு பிறப்பு உண்டென்றால்
நீங்களே எமக்கு தந்தையாக வர வேண்டும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நினைவுகளுடன் வாழும்
மனைவி (சரோஜா), அருமை மகள் ( நிஷா றொமேஷ்),
அன்புப் பேரப்பிள்ளைகள் ( ரினிற்றி, டெவோன்),
சகோதரர்கள், மருமக்கள் மற்றும் உறவினர்கள்...