Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 22 NOV 1927
விண்ணில் 01 MAY 2015
அமரர் நேசரட்ணம் செல்லப்பா
றூபி அக்கா- ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 87
அமரர் நேசரட்ணம் செல்லப்பா 1927 - 2015 சுண்டுக்குழி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், சரசாலை தெற்கை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த நேசரட்ணம் செல்லப்பா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆருயிர் தாயே.....

இப்பூமியில் - நீங்கள்
இல்லை என்பதை எண்ணும்போது....
இடிந்து எரியுது இதயம்.....!!!

அன்பு பொங்கும் உம் அழகு முகத்தை
இனி நாங்கள் என்று காண்போம்?
அம்மா! என்று நாங்கள் யாரை அழைப்போம்?

காலத்தால் எம்மைப் பிரிந்து
கண்களில் நீர் மல்க வைத்து
நாம் இங்கே தவித்து நிற்க
எம்மை விட்டுப் போனதெங்கே?

ஆண்டு பத்து சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices