யாழ். நிலாவரை புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நேசமணி முருகேசு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே அம்மா
என் செய்வோம் நாங்கள்?
காயங்கள் ஆறிப்போகும்!
கற்பனை மாறிப்போகும்!
கனவுகள் களைந்துபோகும்
ஆனால் என்றுமே மாறாமல் இருப்பது
உன் பாசம் மட்டுமே
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்!!
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 20-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் வீட்டு கிருத்தியக் கிரியை 22-05-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனியிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.