யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நேசமலர் ஆனந்தராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
இன்றோடு 31 நாட்கள்
அவணியிலே நீங்கள் இல்லை
நினைக்கையில் வியக்கின்றேன்
நிஜமாய் நான் வாழ்ந்தேனா?
நினைவுகள் வருகையிலே
நிலைகுலைந்து போகின்றோம்
காணும் காட்சிகளில்
கண்முன்னே நிற்கின்றீர் !
அன்பாய் அம்மா என்று
அழைத்திட யாருண்டு?
வேதனையை சொல்லிவிட
வார்த்தைகள் இல்லையம்மா
மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட இவ்வுலகில்
நீ வரும் காலம் வரும்
என எண்ணி வாழ்கின்றோம்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 01-06-2022 புதன்கிழமை அன்று 06:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், 03-06-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் சோடாக்கொம்பனி ஒழுங்கை மல்லாகத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ள ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய திருமண மண்டபத்தில் இடம்பெறும் மதியபோசன நிகழ்விலும் தாங்கள் குடும்பசகிதம் வருகை தந்து கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:-
சோடாக் கொம்பனி ஒழுங்கை,
மல்லாகம்,
யாழ்ப்பாணம்