Clicky

மலர்வு 11 JUN 1949
உதிர்வு 16 APR 2025
அமரர் மகாலிங்கம் நேசலிங்கம் (ஜேர்மனி V V T அண்ணா)
வயது 75
அமரர் மகாலிங்கம் நேசலிங்கம் 1949 - 2025 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mahalingam Nesalingam
1949 - 2025

நேசலிங்கம் என்ற பெயருக்கேற்ப நேசத்துடன் முப்பத்தைந்து ஆண்டுகளாக. நீங்கள் வாழ்ந்து வந்த பெக்ரா (Vechta) மாவட்டத்தில் எல்லோரையும் உடன் பிறந்தவர்களாக நேசித்து வாழ்ந்ததால் VVT அண்ணன் VVT மாமா VVT தாத்தா என்று குழந்தைகளாலும் பல ரியவர்களாலும் அன்பாக அழைக்கப்பெற்ற நீங்கள் எல்லோருடைய நன்மை தீமைகளிலும் முன்னின்று உங்களுக்கெனத் தனியிடம் பெற்ற அண்ணனே உங்களின் மறைவுச் செய்தி கேட்டுக் கலங்கி விட்டோம் மனத்தாலும் செயலாலும் மற்றவர்களுக்குத்தீங்கு நினைக்காத உங்களின் மணித்துளி மரணமே சாட்சி் நீங்கள் வாழ்ந்த நகரத்தை விட்டுச் சென்று ஏழு ஆண்டுகள்க கடந்தா லும் எல்லோர் மனங்களிலும் நீங்கா இடம் பெற்ற உங்களின் பிரிவுச் செய்தி கேட்டு ஊரே கலங்கி நிற்கிறது மாண்டவர் மீண்டும் வருவரோ இம்மாநிலத்தில் மரணமே வாழ்வின் நிச்சயம் உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் உங்கள் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி , பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உடன் பிறப்புக்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் ஶ்ரீதரன் குடும்பத்தினர் யேர்மனி (Lohne) Oldenburg

Write Tribute