மரண அறிவித்தல்

அமரர் நீலாம்பிகை சந்திரசேகரம்
ஓய்வுபெற்ற ஆசிரியை- விபுலானந்தா வித்தியாலயம், கட்டைபறிச்சான் மூதூர்
வயது 83

அமரர் நீலாம்பிகை சந்திரசேகரம்
1936 -
2019
திருகோணமலை, Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திருகோணமலை 10ம் குறிச்சியைப் பிறப்பிடமாகவும், கட்டைபறிச்சான், லண்டன் Mitcham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நீலாம்பிகை சந்திரசேகரம் அவர்கள் 09-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஏரம்பு, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற கோபாலபிள்ளை, தங்கநாச்சியார் தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகதீசன்(லண்டன்) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி, மாசிலாமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயமணி(ஜெயா- லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,
காயத்திரி, பவித்திரா, ஆருரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்