யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நீலாம்பாள் பரமானந்தம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
புங்கையூரின் புன்னகை அரசி நீலாம்பாள்
அன்னை இறையடி கண்ட ஆங்கில நாளாம்
இவ்வருட கார்த்திகை பன்னிரண்டு
முதலாம் ஆண்டு நிறைவு காணும் நிலையில்
அம்மையின் முதல் நினைவாக இந்து நட்சத்திர திதி
நிர்ணயப்படி இம்மாதம் முப்பத்தொன்றதில் இயல்பான
சடங்குகளும் உறவின் கடமைகளும் நிறைவேற்ற
இறைவன் அருள் தந்தான் எமக்கே.
எண்மக்களை பெற்றெடுத்த எம் அன்னை
ஒரு வற்றாத ஊற்றாய் வாரி வழங்கும் வள்ளலாய்
எம்முடன் வாழ்ந்த காலம் தனை எம்மால்
மறக்கவோ மறைக்கவோ முடியலையே
காலங்கள் கடக்கலாம் காரிருள் கலையலாம்
எம் அன்னையவள் நினைவலைகள்
எமை விட்டு விலகாது
தந்தை மறைந்த காலை தானே
தனி ஒருவளாய் தனிக்காட்டு
ராஜாக்களாய் எமை வழி நடத்தி
நீங்காத்துயரமதை எமக்களித்து மீளாத்துயில் கண்ட
எம் அன்னை நினைவில் நாம் என்றும் வாழுவோம்
பராபரமே..