10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 DEC 1964
இறப்பு 09 AUG 2012
அமரர் நவரட்ணசிங்கம் பாஸ்கரசிங்கம்
(ஈசன்)
வயது 47
அமரர் நவரட்ணசிங்கம் பாஸ்கரசிங்கம் 1964 - 2012 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

புங்குடுதீவு 7ஆம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Solothurn மாநிலம் Grenchen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவரட்ணசிங்கம் பாஸ்கரசிங்கம்  அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பிற்கு இலக்கணமாய்
 பண்பிற்கு சிகரமாய்
 பாசத்திற்கு ஒளிவிளக்காயிருந்து
எமை பாரினிலே எமை வளர்த்து
பரிதவிக்கவிட்டுச் சென்ற எம் தெய்வமே
 நீங்காத நினைவுகள் தந்து
 நீண்டதூரம் சென்று ஆண்டுகள்
 பத்து கடந்தாலும் அழியவில்லை
 உங்கள் நினைவுகள் அகலவில்லை
அப்பாவின் அன்புமுகம்!

பூங்காவாய் நீரே இருந்தீர்
பறவையாய்ப் பறந்துவிட்டீர்
 பூக்களெல்லாம் வாடிவிட்டோம்
பூமுகத்தை தேடுகின்றோம்.

கண்ணிமைக்கும் பொழுதினிலே-
காலனவன் காற்றாய் கொண்டு
 சென்றதென்ன! பத்தாண்டுகள்
ஆனபோதும் ஆறுமோ எம்
துயரம் எம்மால் ஆழ்ந்த துயரை
ஈடு செய்யமுடியவில்லையே ....

தகவல்: குடும்பத்தினர்