
யாழ். புத்தூர் நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில் கிழக்கு ஆடியன் பிட்டி ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினராசா இந்திராணி அவர்கள் 11-05-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நவரத்தினராசா(ஓய்வுபெற்ற ஆசிரியர் சாவகச்சேரி இந்துக்கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
மஞ்சுளா(கனடா), Dr. மஞ்சுதன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவபாதசுந்தரமூர்த்தி, திருலோகநாயகி, சர்வானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வரதராசா(கனடா), Dr. மகாஜினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, அன்னலட்சுமி மற்றும் நாகராசா இராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தீபிகா(கனடா), விதுனன்(கனடா), பக்ஷிகா(பிரித்தானியா), கோகுலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest condolences to the family. May her soul Rest In Peace.