14ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
வவுனியா நெங்கேணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேஜர் நவரத்தினம் விதுரா அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.
தேசத்தின் தூணாகினாய் நீ
துயில்கின்ற கல்லறைதனில்
கனவுகள் பலவுடன் உறுதி கொண்டோம்
நேசித்த உறவுகள் நெஞ்சதிரத் துடித்திருக்க
நேயம் கொண்ட தாய் நிலத்தில் நீ புதையுன்டாய்
பாசமிக்க சொந்தங்களுடன் பாரினில் வாழும் -தமிழ்
உள்ளங்கள் கூடி நின்ற தோழர்கள்
குமுறும் நிலை காணாமல் தூங்கினாய் நீ
14 ஆண்டு முடிவு எனினும்
முடிந்து போகாது உன் நினைவு
நிறைந்து கிடக்கும் சோகத்தில்
தொலைந்து போகாது உன் கனவு
தொழுது நின்று வாழாது தோள் கொடுத்தாய் விடுதலைக்கு
தேசம் காணும் போதினிலே தேற்றம் காண்போம்
உன் நினைவுடனே..!
தகவல்:
குடும்பத்தினர்
Om Shanthi ??