யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நவரெத்தினம் துரையப்பா அவர்களின் நன்றி நவிலல்.
”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”
எங்கள் குடும்ப தலைவன் சிவபதம் அடைந்த செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசி ஊடாகவும், இணையத்தளங்கள், முகநூல் ஊடாகவும், எங்கள் தெய்வத்தின் துயரில் பங்கெடுத்தவர்களுக்கும், மலர்வளையங்கள் வைத்தும், மாலைகள் அணிவித்தும் கண்ணீர் அஞ்சலிகளை வழங்கியோருக்கும், இறுதிக் கிரியை நிகழ்வுகளில் கலந்துகொண்ட அன்பு உள்ளங்களுக்கும், கிரியைகளை ஆற்றிய சிவாச்சாரியார்களுக்கும், ஆறாத்துயரில் மூழ்கிய வேளையில் முப்பொழுதும் உணவு வழங்கி ஆற்றுப் படுத்தியவர்களுக்கும், இந்நினைவு மலரைத் தொகுத்து உதவிய கவி சசிக்குமார் அவர்களுக்கும், இம்மலரை மிகவும் குறுகிய காலத்தில் அச்சிட்டு உதவிய RG Printers Toronto அச்சகத்தினருக்கும், இன்றைய ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்துகொண்டவர்களுக்கும் மற்றும் பல்வேறு வழிகளில் உதவிய அன்பு நெஞ்சங்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.