
யாழ். வளலாய் மேற்கு பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் தங்கரத்தினம் அவர்கள் 08-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பு, ஆசைபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
வைகுந்தராஜன், வைகுந்தநாதன்(வவா), லலிதா, பத்மினி(வவி), ராகினி(அனுஷா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கலைமகள், பிறேமாதேவி, லோகநாதன், ஜெயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சுந்தரலிங்கம் மற்றும் நேசரத்தினம், அன்னலட்சுமி, கமலாதேவி, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(தேவன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், தங்கரத்தினம், துரைரத்தினம் மற்றும் இராசரத்தினம், அன்னரத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
நிதுஷன், வைஷ்ணவி, பிரணவன், லீனா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
ஹரினிகா, கஜமுகி, ஜெனுசெந்த், ராவுல் ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-12-2020 புதன்கிழமை அன்று வளலாயிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வளலாய் கூனன் காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.