10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நவரத்தினம் நல்லதம்பி
நவம் PM - உப தபால் அதிபர் பெரியவிளான்
வயது 83
யாழ். முள்ளானையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் நவரத்தினம் நல்லதம்பி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 02-07-2025
ஆண்டு பத்து ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே
எண்ணிய பொழுதெல்லாம்
கண்ணில் நீர் கசிகிறதே
உணர்வால் உள்ளத்தால்
வாழும் தெய்வமாகி
ஒளியாகி எமக்கெல்லாம் வழியாகி
எம் இதயங்களில் வாழ்கின்றீர்
அன்பின் சிகரமே
வாழ்வின் ஒளிவிளக்கே
எம் குடும்பத்தலைவனே!
எம் வாழ்வின் வழிகாட்டிய தீபமே!
காற்றிலே கலந்து ஆண்டுகள் பத்து ஆனாலும்
காலடி தழைக்கும் உம் நினைவுகள்
எம் மனத்திரையினுள்ளே முழையரும்பி கொடியாய்
மலர்ந்து மணம் வீசியபடி இன்னும்
தோளிலே தெளித்த பாசத்தூறல்கள்
வாழ்வில் ஆயிரமாயிரம் கண்கள் ஓரம்
கண்ணீர் துளிகளாய்...
எங்கள் வீட்டு நிலவாக
ஒளி வீசி மகிழ வைத்தீரே!
யார் கண்பட்டு மறைந்து போனீரோ
தாமரை மலர் நீரில் ஆடுவதுப்போல
நாங்கள் உமைப்பிரிந்து
தத்தளித்து மனம் ஆடுகின்றதே..!
உங்களை ஒரு போதும்
மறவாமல் வணங்குகின்றோம்
இறைவன் திருவடியில்
சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்..!