யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Gutersloh வை வதிவிடமாகவும் கொண்டிருந்த நவரஞ்சிதமலர் வேணுதாஸ் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும்
எங்களை பாதுகாத்த தெய்வமே
எங்கள் அனைவரையும் விட்டு பிரிந்தது ஏனோ?
நடமாடிய வீட்டில்
படமாகிப் போனவளே!
உம்மை எம் மன வீட்டில்
சுமந்து நிற்கின்றோம்!
மூச்சாக எம்முள்ளே நாற்றாக ஆனவளே
மூ உலகின் தெய்வமாய் எம்முள்ளே ஆனவளே!
காற்றாக சுவாசமாய் எம்முள்ளே வாழ்பவளே
நாம் வீற்றிருந்து விளக்கேற்றி
காத்திருப்போம் உனக்காய்
கண்களிலே காட்சி தர வருவாயா?
இன்றோடு ஐந்தாண்டுகள் கழிந்தாலும்
உங்கள் நினைவுகளுடன் மறக்க
முடியாமல் மனதில் நிறுத்தி வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..