
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும், கொழும்பு பம்பலபட்டியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நவநீதபுஷ்பராணி சண்முகம் அவர்கள் 15-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகம்(Selvarajah & Co உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
உதயகுமார், ஷோபனா, தேவகுமார், சுரேஷ்குமார், பிரகலா, செந்தில்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பாரிஜாத புஷ்பராணி, இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஞானகௌரி, காலஞ்சென்ற புவனேந்திரன், நர்மதா, சுபதா, சிவானந்தன், பிரஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஜந்தன், ஜானுஷா, ஷிரோமினா- சிவலக்ஷன், ஆகாஷன், சந்தோஷ், கணபதி, கிஷோர், அஞ்சிகா, மிதுன், நிதின், சிரேஷ்டன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் A.F Raymond, 115 D.s.Senanayake Mawatha, Colombo-8 எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர், மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று ந.ப 12:00 மணிக்கு கனத்தை(Borella) மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details