மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த நவநாதன் யசோதன் அவர்களின் 5வது ஆண்டு நினைவஞ்சலி.
உன் பிரிவால் வலிகள் தந்தவனே
வசந்தத்தை தொலைத்து தூரமானாயோ
உன் புன்னகை காணாது தவிக்கின்றோம்
உன் மொழி கேளாது அழுகின்றோம்
கண்ணீருக்கு கலப்படம் தேவையென்றோ
குருதி படித்த நினைவுகளை தந்துவிட்டாய்
எங்கள் அன்புச் சகோதரனே உன்னை
இழந்துவிட்டோம் அது உண்மைதான்....
எங்களின் நினைவுகளைக் கூடவெறும்...
நினைவுகளாகவே துளைத்து விட்டோம்....
இப்போது தேடுகின்றோம் உன்
எதிர்காலத்தையல்ல..
உன்னுடைய இறந்த கால நினைவுகளையே
இனி ஏதும் பயனேதுமில்லை...
எட்டாப் பழம் புளிக்கும் என்று
தட்டிக் கழிக்கவும் முடியவில்லை...
ஏனெனில் அவை வெறும் நினைவுகள் அல்ல
ஒவ்வொரு நினைவிலும் நீ இன்னும்
எங்களுடன் இருக்கின்றாய்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!