
யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நவஜோதி சரச்சந்திரன் அவர்கள் 22-04-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம், பூரணம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சரச்சந்திரன் பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
வினோதன்(அவுஸ்திரேலியா), விஜிதன்(கனடா), வினோதினி(ராஜி- கொழும்பு), லாலினி(Dali- உருப்பிராய்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுகாஷினி(அவுஸ்திரேலியா), வெண்ணிலா(கனடா), தினேஷ்(கொழும்பு), இளங்கீரன் (உரும்பிராய்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெகசோதி(சாந்தி), அருள்சோதி(ரஞ்சி), சிவகுமார்(குமார்), சந்திரகுமார்(சந்திரன்), நிரஞ்சனா, மோகனகுமார்(போகன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
லதாகுமார், போலானந்தம், பாலவிக்னா, நவநிதி, ஜெயமுகுந்தன், கிருஷ்ணவேணி(வேணி) அகியோரின் அன்பு மைத்துனியும்,
சாரா கிரன்யா, நயோமி ஜெசிக்கா, ஜனனி டுல்மி, கிசோன், தர்மிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.