

யாழ். சித்தன்கேணி வட்டு கிழக்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட நதிவீரகுலரத்தினம் மருள்நீக்கியஅம்மையார் அவர்கள் 27-05-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவபெருமான், நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற நதிவீரகுலரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
அனுஷியா, குகநீதன், செல்வநீதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரேமாவதி, நேசமலர், இராஜமலர், இந்துதேவி, சிவராஜா, ஜெயதேவி, ஜெயவீரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலாரஞ்சிதன், மாலதி, நந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாலினி, சஞ்சயன், டினேஷ், லபிஷா, அப்ரறிசன், சபீசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-05-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இல. 16/17, கிறீன் வீதி எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:30 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.