
நெதர்லாந்து 's-Hertogenbosch(Den Bosch) ஐப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Rugby ஐ வதிவிடமாகவும் கொண்ட நத்தாஷா சுவெஞ்சலா விலோஸ் அவர்கள் 14-11-2020 சனிக்கிழமை அன்று அகால மரணம் எய்தினார்.
அன்னார், றெக்ஸி மிரால், காலஞ்சென்ற மார்ட்டின் விலோஸ், மலர் பெர்னான்டோ தம்பதிகள், காலஞ்சென்ற டனிஸ்ரன், பெர்னாண்டோ தம்பதிகளின் அருமைப் பேத்தியும்,
சுதத் விலோஸ் சந்திரிக்கா விலோஸ் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
தர்ஷீ, இவான் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பபிதா விலோஸ்- அன்ரனி கோமஸ்(இத்தாலி), இராஜேஸ்வரி விலோஸ்- ரஞ்சித் பெர்னாண்டோ(அவுஸ்திரேலியா), ஷிரானி விலோஸ், காலஞ்சென்ற ராஜீ வாஸ்(இலங்கை), ரெரன் பெர்னாண்டோ- இருணி பெர்னாண்டோ(நீர்கொழும்பு) ஆகியோரின் அன்பு மருமகளும்,
சகுந்தலா பெர்னாண்டோ- சாமன் பெர்னாண்டோ(நீர்கொழும்பு) தம்பதிகளின் அன்புப் பெறா மகளும்,
நாமலி, நிரஞ்சலா, சுராந்தி, மனோரி, நிலாந்தி, ரோஹினி, நிசாதன், கங்கிஜா, அன்ரன், ரிஷ்னி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செனோல், சச்சின் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
hahahh