1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நடராஜா ஸ்ரீராசகுலதேவன்
(பரமேஸ்வரன் கண்ணாடி ஸ்ரீ)
வயது 75

அமரர் நடராஜா ஸ்ரீராசகுலதேவன்
1949 -
2024
யாழ் அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் செங்காளனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா ஸ்ரீராசகுலதேவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனதப்பா
உங்களை இழந்து
ஆறாத யுகங்களாய் ஒவ்வொரு
கணமும் கனத்த நாட்களாய் உங்கள்
நினைவுகளோடு கழிகிறதே அப்பா..
நீங்கள் இல்லா இல்வாழ்க்கை
நிறைவற்றதாகவே இருக்கிறது
உங்களைப் போல் யார் வருவார்..
எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் மறையாது அப்பா!
எத்தனை உறவுகள் என்
அருகில் இறுந்தாலும்
நான் தேடும் ஒரே உறவு
நீங்கள் மட்டுமே
ஏனென்றால் நீங்கள் என்
உறவு அல்ல என் உயிர் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டிநிற்கின்றோம்..!
தகவல்:
வினாயகராம்(மருமகன்)