Clicky

25ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 MAY 1925
இறப்பு 07 MAY 1995
அமரர் நடராசா நல்லதம்பி (வைரவநாதன்)
வயது 69
அமரர் நடராசா நல்லதம்பி 1925 - 1995 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிடமாகவும் கொண்டிருந்த நடராசா நல்லதம்பி அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.

”எங்களுக்காக வாழ்ந்து எங்களை
வாழ வைத்த தெய்வமே!
தான் பட்ட கஷ்டம் தன் பிள்ளைகள் படக்கூடாது”
எனக்கருதி உங்கள் வாழ்நாள் முழுவதையும்
குடும்பத்திற்காகவும் எமது
முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணித்தவரே!

நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டதனை
எம்மால் நம்பமுடியவில்லை!

நீங்கள் எமக்கு வழிகாட்டியாய்
எங்கள் இதயத்திலேயே வாழ்கிறீர்கள் ஐயா!

“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை”

என்ற குறள் வரிகளுக்கமைய உங்கள் பெற்றோருக்கும்
அன்பு மனையாளுக்கும் பிள்ளைகளாகிய எமக்கும்
துணையாயிருந்து இல்லறம் என்னும் நல்லறம் கண்டு

உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருடனும்
அன்பாகப்பழகி பகைச்சுவையறியாப் பண்பாளராக வாழ்ந்து
எமக்கு நல்வழிகாட்டி நிற்கும் ஆசானே!
எங்கள் நடராசா! ஐயா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், சகோதர, சகோதரிகள்.

தகவல்: குடும்பத்தினர்