அன்பென்ற ஆறு பூத்து தினமும் அள்ளுதடா நெஞ்சம் எமது ஐம்புலனும் ஈறு தாண்டி கொல்லுதடா நிதமும்...! உன் பொன் முகத்தால் நீ மலர்ந்து புன்னகைக்கும் போது சுற்றும் பூமி கூட சற்றே நின்று உன்னையே உற்று நோக்கியதாய் தோன்றும்...! உன்னைப் பத்து மாதம் சுமந்தவளின் மடியுறங்கிய நினைவுகளும் - உனைப் பைத்தியமாய்ச் தோள்சுமந்தவவனின் மார்புறங்கிய உணர்வுகளும் என்றும் அழியாது...! அவர்கள் உணர்வுகளில் என்றும் உனது உயிர் ஊர்கின்றது எந்த நிலையிலும் அது மாறாது காரணம் உன்னை விட அவர்களுக்கு பிரிவு என்ற வலிகளை யாரும் தந்துவிடவில்லை...! உன்னை மறந்து தூங்கியதாய் நினைத்த இரவுகளை பொய்யென்று உரைக்கின்றன காலையில் அவர்களது கண்ணோரம் காய்ந்துள்ள கண்ணீரின் தடங்களைக் காணும் போது...! நிஜங்களில் தேடினால் கிடைக்க மாட்டாய் என்று தெரியும் அதனால் தான் தம் கனவினில் உன் நினைவுகளை தினமும் கழுவிப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்...! அவரகள் கண்களில் வழியும் கண்ணீர்வெறும் ஒற்றைத் துளியல்ல உன் வலியால் தினம் வடியும் ஆயிரம் இரத்தத் துளிகள்...! நெஞ்சிலே விதையாய் விழுந்தாய் முட்டி மோதி துளிர் விடும் முன்னே காய்ந்து நீயும் சருகாய் ஆனாய்...! நெஞ்சிலே நினைப்பை வைத்து சோகத்தை சுவைக்க வைத்தாய் கண் சொட்டும் துளிகள் சேர்த்து சோக வரிகள் எழுதிடவும் வைத்தாய்...! உன்னை நினைத்து எமது இமைகள் சேமித்த கண்ணீர்த்துளிகள் மரணம் வரை கரைந்தே செல்லும் உன் ஞாபகம் எமது ஆயுளை வரை நிழலாய் எம்மைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்...! றகு குடும்பம் மொன்ரியல் கனடா