யாழ். புங்குடுதீவைப் பூர்விகமாகவும், கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த நந்தகுமார் கதிர்செல்வன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ எம்மை விட்டு பிரிந்து
பத்தாண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும்
உன்
நிலவு முகம் தேயாதடா!
கண்ணே பத்து வருடங்கள்
ஆயினும்
எம் குலக்கொழுந்தே - நாம்
பத்து நிமிடங்கள் போல்
இன்றும் தவிக்கின்றோம்
பட்டாம் பூச்சியாய் பறந்தவன் நீ
எத்தனை ஆசைகள் எத்தனை கனவுகள்
கண்டவன் நீ...
நீங்காத உன் நினைவுகள்
நித்தம் எமை வந்து வாட்டுது
கண் நிறைந்த உனது தோற்றம்
கனவில் வந்து வருத்துகிறதே
இன்முகம் காட்டி
எம் இல்லம் சுற்றிய
நாட்களை
எப்படி மறப்போமடா!
காலங்கள் பல கடந்தும்
கண்ணீருடன் கண்கள் உன் நினைவுடன்.
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்- எங்கள்
உள்ளங்களில் நீங்காமல் நிறைந்திருப்பாய்
என்றும் உன் நினைவுகளோடு
நாம்
உனது ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்போம்
ஓம் சாந்தி...சாந்தி....சாந்தி.....!