

யாழ். இளவாலை பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாமோமரி சூசைப்பிள்ளை அவர்கள் 28-01-2021 வியாழக்கிழமை அன்று இறைவண்டி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை இராசேந்திரம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற சின்னராணி, ஜெயசீலி, திருச்செல்வர்(பெரியதுரை), பெர்னாண்டோ(சின்னத்துரை), ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மரியதாசன்(மாஸ்டர்) மற்றும் கபிரியேற்பிள்ளை, பூமணி, யூக்கலிஸ்ரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மரியநேசன்(யோய்), ஜெபநேசன்(டீன்), ஜெயநேசன்(ஜெயா), சாந்தி, சத்தியன், ஜெயந்தி, ரோய், டனி, சாமளா, பிறேமி, கமில்ரன் ஆகியோரின் சிறிய தாயாரும்,
ஜொய்சி, சுபேசன், கெஸ்சி, ஜெசி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் மு.ப 09:30 மணிவரை கொழும்புத்துறை திரு சிலுவை கன்னியர் மடத்தில் ஆராதனை நடைபெற்று அதனை தொடர்ந்து பெரியவிளான் St. John The Baptist தேவாலயத்தில் மு.ப 10:30 மணிக்கு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்ன்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.