யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், நாவற்குழியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த Dr. நமசிவாயம் சத்தியசீலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
விழி நீர் சொரிந்து வணங்குகின்றோம்
ஆண்டுகள் ஒன்று ஓடி மறைந்தாலும்
ஆறாத துயரத்துல் மூழ்கித்துடிக்கிறோம்
அன்பால் எமை அணைத்து அறிவூட்டி
எமை ஆளாக்கி விட்ட தெய்வமே
அவசரமாய் சென்றதேனோ!
கண்னை இமை காப்பது போல்
எமைக் காத்து எம் கண்களில் ஒருதுளி
நீர்கண்டாலே தாங்காத எம் தந்தையே
உங்கள் பிரிவால் தினமும் விழி நீர்
ஆறாய் ஓட துடைத்திட நீங்கள் இல்லையே!
அடுத்தவர் நோய்க்கு மருத்துவம் பார்த்த நீங்கள்
உங்கள் நோய்க்கு மருந்தும் பார்க்காததேனோ
நோய் வந்து பாயில் படுத்தால்
எமக்கு துன்பமென்றோ காலன் வந்தவுடன்
சடுதியில் சென்றீர்களோ அப்பா!
கண்மூடும் அந்த இறுதிக்கணங்கள்
உங்கள் அருக்கிருக்க முடியவில்லையே
அருகிருந்து அள்ளி அணைத்து விடவும்
கொடுத்து வைக்கவில்லையே எங்களுக்கு எம்மை நினைத்து
ஏங்கித் தவித்து சென்றீர்களோ!
பாவிகளாய் நாம் பரிதவிக்கிறோம் இன்று!
விழி நீர் சொரிய இறுதியாத்திரை அனுப்பி விட்டு
நாளும் கதிகலங்கித் தவிக்கின்றோம்
தேற்றிக்கொள்ள முடியாமல் பரிதவித்து நிக்கின்றோம்
ஓராண்டு என்ன எத்தனை ஆண்டுகள் ஓடிமறைந்தாலும்
உங்கள் அன்பும் பாசமும் அரவணைப்பும்
என்றும் எம் நினைவை விட்டு அகலாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர்ப்பூக்கள் காணிக்கையாக்குகின்றோம்
My Brother we miss Santhi Santhi