யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாவும் கொண்ட நல்லையா உருத்திரன் அவர்கள் 10-01-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நல்லையா(காசி, முருகர்) கமலாம்பிகை தம்பதிகளின் ஏக புதல்வரும், சங்கரப்பிள்ளை விநாயகமூர்த்தி பரமேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,
சுகிர்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
துவாகர் அவர்களின் அன்புத் தந்தையும்,
பூபதி விவேகானந்தராஜா அவர்களின் அன்புச் சகோதரரும்,
விவேகானந்தராஜா, சுபாசினி, சுந்தரேசன், ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற விக்னேஸ்வரன், மற்றும் பிரியா ஆகியோரின் அன்புச் சகலனும்,
ராஜ் சஜீவன், கல்யாணி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கெளரி, விஜித்தா, நிதுரா, அமரா, ஹரிஸ் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.