13ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நல்லையா ஸ்ரீகிருஷ்ணதாசன்
(சுரேஷ்)
வயது 48

அமரர் நல்லையா ஸ்ரீகிருஷ்ணதாசன்
1961 -
2009
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லையா ஸ்ரீகிருஷ்ணதாசன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
மண்ணிலே வீழ்ந்த மழை
மீண்டும்
விண்ணுக்கே செல்லுமென்பார்
விண்ணுக்குச் சென்ற நீங்கள்
மீண்டும்
மண்ணுக்கு வரமாட்டீரோ ?
எம்
கண்ணிலே வழியும் நீரை
உங்கள்
கடைக் கண்ணால் பாருங்கள்!
உமை நினைத்தே உருகின்றோம்!
ஓராயிரம் ஆண்டுகளானாலும்
காற்றும், கடலும், வானும்,
கருமுகிலும்
இவ்வுலகில்
போற்றி வாழ்கின்ற காலம்வரை...
எம்
கடைசி மூச்சும் பேச்சும் இவ் உலகில்
வீற்றிருக்கும் இறுதி காலம்வரை...
உங்கள் நினைவுகளெல்லாம் எங்களோடு
என்றென்றும் நிறைந்திருக்கும்
வணங்குகின்றோம் உங்களை கரங்கள் கூப்பி...
தகவல்:
நல்லையா குடும்பத்தினர்(ஹரன்)