

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா பாக்கியம் அவர்கள் 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சபாபதி அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சபாபதி நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
வாமதேவன்(வாமன் -பிரான்ஸ்), காலஞ்சென்ற புஷ்பகாந்தன்(காந்தன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குணாதேவி(குணா- பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, கனகம்மா, கிருஷ்ணபிள்ளை, துரையப்பா(சமாதான நீதவான் JP) மற்றும் நாகரெத்தினம்(கொழும்பு- சமாதான நீதவான் JP), காலஞ்சென்ற கணேசமூர்த்தி, சிரோன்மணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகேஸ்வரி(பிரான்ஸ்), பரமேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் உறன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கணேசு, கணபதிப்பிள்ளை, நீலாம்பிகை, பரமேஸ்வரி மற்றும் சுபத்திராதேவி(கொழும்பு), தங்கமணி(கிளி- டென்மார்க்), காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம்(சாம்பு), கனகசபை(மீசை), ஏகாம்பரம், இராசையா, சரஸ்வதி(காசிபதி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அனோஜ், நிலுஜா, அனுசன், அஜித், அலக்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-09-2020 புதன்கிழமை அன்று பி.ப 01:30 மணிக்கு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.