Clicky

நன்றி நவிலல்
பூவுலகில் 14 DEC 1953
விண்ணுலகில் 03 JAN 2026
திரு நல்லதம்பி தர்மராஜா
பிரபல வர்த்தகர்
வயது 72
திரு நல்லதம்பி தர்மராஜா 1953 - 2026 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட S.K நல்லதம்பி தர்மராஜா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 31-01-2026 சனிக்கிழமை அன்று புங்குடுதீவு 10ம் வட்டாரம் நாகேஸ்வரி சமேத நாகேஸ்வரர் ( நாயன்மார் கோவில்) ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள கடற்கரையில் காலை 7:00 மணிக்கு நடைபெற்று, அன்னதானம் கோவில் அன்னதான மடத்தில் காலை 10:00 மணிக்கு நடைபெறும். அதனைத்தொடர்ந்து 02-02-2026 அன்று வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் பகல் 12:00 மணிக்கு , கொழும்பு 6 ல் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற இருப்பதால்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்பதுடன் அதனைதொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்தில் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம். அன்னாரது மறைவுச்செய்தி கேட்டு நேரில் வந்து ஆறுதல் பகிர்ந்தோருக்கும், மலர்மாலைகள் சாத்தியோருக்கும் , தொலைபேசி , வலைத்தளங்களில் ஆறுதல் சொன்னோருக்கும், புத்தகம் வெளியிட்ட சண் Printers கொழும்பு குடும்பத்தினருக்கும். மற்றும் சகல உதவிகளை புரிந்த அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.