யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி தாமோதரம்பிள்ளை அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 26-01-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 07.00.மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும் வீட்டுக் கிருத்தியக் கிரியைகள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.