
யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லதம்பி சின்னராசா அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐயா நீங்கள் எங்களை விட்டு பிரிந்து ஆண்டுகள்
இருபத்தைந்து ஆனாலும் எங்கள் எல்லோரினதும்
இதயத்திலும் இன்றும் நீக்கமது நிறைந்து
இருக்கிறீர்கள்...
ஐயா உங்கள் அயராத உழைப்பும்
மனைவி பிள்ளைகள் மேல் கொண்ட
வார்த்தையினால் கூற முடியாதா அக்கறையும்
அன்பும் பண்பும் அரவணைப்பும்
கடலில் அலை மோதுவது போல்
உங்கள் நினைவலைகள் அலையோசையாய்
எங்கள் செவிகளில் ஒலிக்கிறது இன்றும்..
ஐயா உங்கள் அழகான உருவத்தை மறப்போமா
அயராத கடின உழைப்பை மறப்போமா,
அன்பான வார்த்தைகளை மறப்போமா,
அகோரமான சீற்றத்தையும் மறப்போமா
எதை நாம் மறப்போம் எப்படி நாம் மறப்போம் ஐயா
உங்களை எம்மால் மறக்கவே முடியாது...
ஐயா நீங்கள் மறையாத சூரியன்
அணையாத தீபம் தேயாத பிறை
முற்றிலும் நீங்கள் முழுமதி
எங்கள் எல்லோரினதும் உதிரத்திலும்
கலந்து உயிராய் எம்முடன் வாழ்கிறீர்கள் ஐயா
உங்கள் பாதத்திற்கு மலர்த்தூவி
வணங்குகிறோம்....
உங்கள் பிரிவால் துயருறும்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி !!!!!