யாழ். உடுப்பிட்டி இமையாணன் வடக்கைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை, லண்டன் New Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி நல்லையா அவர்கள் 26-04-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி குஞ்சிப்பிள்ளை தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும், கந்தரோடையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சீவநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவளராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, அன்னம்மா, கந்தசாமி, நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரி, லோகேஸ்வரி, லோகேஸ்வரன், தவமலர், வைத்தீஸ்வரன், மகேந்திரராஜா, காலஞ்சென்றவர்களான மகாதேவா, சிவன்செயல், விக்கினராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தயாளபதி, தயாநந்தன், தயாளினி, தயாநிதி, தயாபரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திருவருட்செல்வி, நிர்மலா, ரகுநாதன், முருகதாஸ், சிவதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லக்ஷினி, திவாரகா, மேனுகா, கெளசிகா, சிற்சபேசன், ஜிசாந்தன், லக்சயன், ஷோவேதன், அனுசன், குணாளன், ஷாருதி, சன்ஜேஸ், சன்ஜிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதோடு, அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்க்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றோம்.