

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி பழைய பொலிஸ் நிலைய வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி ஏரம்பமூர்த்தி அவர்கள் 17-11-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சிவக்கொழுந்து(ஆசிரியர்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
புஸ்பவதி அவர்களின் அன்புக் கணவரும்,
திருச்செந்தீசன்(பிரான்ஸ்), நிஜேன்(சாவகச்சேரி), செந்தில்மாறன்(சாவகச்சேரி), சோபனா(லண்டன்), கோபிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயலெட்சுமி, காலஞ்சென்றவர்களான யோகலெட்சுமி, இராசதுரை(ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மயூரி(பிரான்ஸ்), சரிதா(செலிங்கோ லைப் - சாவகச்சேரி), சாளினி, ராஜ்குமார்(லண்டன்), திவாகரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சபாரெத்தினம், யோகாம்பிகை(கொழும்பு), தனலெட்சுமி(ஜெர்மனி), தெய்வேந்திரம்(ஜெர்மனி), சண்முகலிங்கம்(லண்டன்), திருச்செல்வம்(கொலன்ட்), கோபாலப்பிள்ளை, துரையப்பா, தர்மலோசினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, சிதம்பரப்பிள்ளை, சுந்தரலிங்கம், வேதாரணியம்பிள்ளை, கனகாம்பிகை மற்றும் யோகாம்பிகை(அப்புத்தளை), தண்டாயுதபாணி(வட்டக்கச்சி), தர்மபாலசிங்கம்(கிளிநொச்சி), தர்மாம்பிகை(லண்டன்), அகிலேஸ்வரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
அஜெய், தனுஷ்கா, கஸ்வினி, திவ்வியா, அபிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, courage to face the days ahead and loving memories to forever hold in your hearts. Syed and All of us at RIPBOOK