யாழ். கொழும்புத்துறை துண்டி றோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லதம்பி வீரசிங்கம் அவர்களின் 100ம் ஆண்டு பிறந்தநாள் நினைவு பகிர்வு.
நூறாவது வயதில் உங்கள் நினைவலைகளுடன்...
ஐயா... !
பாரினில் சீருடன் பண்புடை மக்களாய் வாழ்ந்திட
அன்புடன் பரிவுடன் அரவணைத்தெமை ஆளாக்கிய
எங்கள் அன்புத்தெய்வமே ஐயா....
இறைவன் உங்களை இறப்பால் பிரித்தாலும்
இதயத்தில் பதிந்த உங்கள் திருவுருவம் மறைந்திடுமோ??
அன்பினை ஊட்டி அறிவினைக்கூட்டி
அகத்தினில் தூய்மை பண்புறக்காட்டி
இன்பமாய் இவ்வுலகில் நாம் வாழ்ந்திட
இரு கண்களாய் இருந்த ஐயா!
மண்ணைவிட்டு மறைந்தாலும் எங்கள்
மனதுள் என்றும் ஒளிரும் தெய்வமே!
விண்ணில் இருந்தாலும் எங்கள் விடியல் நீங்களன்றோ!!
எம் சந்ததியின் தீபமே! எப்பொழுதும் உங்கள் நினைவுகளோடு நாம்....
ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஓம் சாந்தி...
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஐயனார் அப்பன் ,அவரது குடும்பத்தை , காப்பாற்றுவாராக.