

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி சொர்ணம்மா அவர்கள் 03-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
பர்பதம், மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, இரட்ணலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவபாலன்(காந்தி), செல்வி, தர்சினி, தரன், சுதர்சன், சுதர்சனா, சோபா, லாவண்யா, அமுதீசன் ஆகியோரின் பாசமிகு பெறாத் தாயாரும்,
ஞானன், தமிழினி, அணு, லோகி, சந்திரன், வாசிகன் ஆகியோரின் அன்பு மாமியும்,
சாகித்தியன், சாகித்தியா, சாதுரியா, கனோதா, ஆத்மிகா, தீபிகா, ரெமோ, இந்துயன், அஜித், அனிஸ், அஜீவ், அஸ்னி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-11-2020 வியாழக்கிழமை அன்று Lanka Florists & Funeral Services(No.162, E.W Perera Mawatha Punchi Borella Colombo 08) எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.